சுடச்சுட

  

  100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கருங்கடலில் மனிதச் சங்கிலி

  By DIN  |   Published on : 16th March 2019 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு இலக்கை எய்த வேண்டும் என வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு மனிதச்சங்கலி கருங்கடல் ஊராட்சியில்  வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. 
  இந்நிகழ்ச்சிக்கு, ஆழ்வார்திருநகரி ஒன்றிய ஆணையர் தங்கவேல் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பாலஹரிகர மோகன் முன்னிலை வகித்தார். 
  இதில் வாக்களிப்பது நமது கடமை; ஜனநாயக முறைப்படி நேர்மையுடன் 100 சதவீத வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. 
  தொடர்ந்து, கருங்கடல் ஊராட்சி அலுவலகம் முன் மனிதச் சங்கலி நடைபெற்றது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் சோமசுந்தரம், சிவகலா, ஜெயக்குமார், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் முருகேசன் செய்திருந்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai