சுடச்சுட

  


  உடன்குடி அருகே ராமசாமிதர்மபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக மணல் லாரிகள் செல்வதாகக் கூறி 15 லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
       குலசேகரன்பட்டினம் அருகே கல்லாமொழி பகுதியில் உடன்குடி அனல்மின் நிலையம் அமைப்பற்கான  பணிகள்  நடைபெற்று வருகின்றன. இதற்காக,  அனல்மின் நிலையப் பகுதிகளை மேடாக்குவதற்காக உடன்குடி அருகே தாங்கை 
  குளத்தில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக லாரிகளில் மணல் அள்ளிச் செல்லப்படுகிறது.  இந்த லாரிகள் உடன்குடி பகுதி வழியாக செல்வதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    அண்மையில் மணல் லாரி மோதியதில் திசையன்விளையைச் சேர்ந்த விவசாயி மூக்காண்டி இறந்தார்.  இந்நிலையில் லாரிகள் அனைத்தும் தாங்கைகுளத்தில் இருந்து ராமசாமிதர்மபுரம் வழியாக குலசேகரன்பட்டினம் சென்றன.  இந்த லாரிகள் ராமசாமிதர்மபுரத்தில் உள்ள கேபிள் வயர்கள், மின்வயர்களை அறுத்துச் சென்றதாம். இதையடுத்து மணல் லாரிகள் அப்பகுதி வழியாகச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் 15  லாரிகளை சிறை பிடித்தனர்.
    இதையடுத்து அப்பகுதிக்கு வந்த வெங்கட்ராமானுஜபுரம் கிராம நிர்வாக  அலுவலர் டேனியல், மெஞ்ஞானபுரம் காவல் சார்பு ஆய்வாளர் திருப்பதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து லாரிகள் விடுவிக்கப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai