சுடச்சுட

    

    தூத்துக்குடியில் இஸ்லாமிய கட்சிகள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 17th March 2019 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் இஸ்லாமிய கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும்,  இஸ்லாமிய மற்றும் தோழமைக் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில், தூத்துக்குடி  பூபாலராயர்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் மத்திய மாவட்டச் செயலர் அகமது இக்பால் தலைமை வகித்தார்.
       இதில்,  மனித நேய மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலர் முகமது ஜான், எஸ்.டி.பி.ஐ. மாநில மகளிரணி செயற்குழு உறுப்பினர் ஷம்ஷாத் பேகம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டப் பொருளாளர் நாசர் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai