சுடச்சுட

  

  ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்றோர் சார்பில் தூத்துக்குடியில் போட்டியிட திட்டம்: கெளதமன்

  By DIN  |   Published on : 17th March 2019 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்றோரின் சார்பில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக,  தமிழ் பேரரசு கட்சித் தலைவரும் திரைப்பட இயக்குநருமான வ. கெüதமன் தெரிவித்தார்.
  தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற பலர் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தங்களின் பிரதிநிதியாக போட்டியிட வேண்டும் என என்னைக் கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில், தூத்துக்குடியில் பல்வேறு அமைப்பினரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
  இதுதொடர்பாக, இன்னும் ஆலோசனை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆலோசனைக்குப் பிறகு தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஓரிரு நாள்களில் அறிவிப்போம். இதற்கு தமிழ் சமூகம் நிதியுதவி அளித்து உதவி செய்ய வேண்டும் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai