மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மண்டல வாரியாக நியமிக்கப்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மண்டல வாரியாக நியமிக்கப்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இம் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட மண்டலஅலுவலர்களுக்கான தேர்தல் தொடர்பான பயிற்சி முகாம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா முன்னிலை வகித்தார்.
 கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்  பேசியது: வாக்குச் சாவடி மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு 8 முதல் 12 வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை முன்கூட்டியே பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் குறித்து முழுமையாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.  தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடி பகுதிகளிலும் அனைவரும் வாக்களிக்க தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  வாக்குப்பதிவு இயந்திரம்  மற்றும் வாக்காளர் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு வாக்குப்பதிவின் போது ஏற்படும் பிரச்னைகளுக்கு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி செயல்பட வேண்டும் என்றார் அவர்.
   மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுபாட்டு அறையை  ஆட்சியர் பார்வையிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன்,  சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com