ஆத்தூர் பகுதியில் பங்குனி உத்திர விழா

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, ஆத்தூர் பகுதி சாஸ்தா கோயில்களில் வியாழக்கிழமை  சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, ஆத்தூர் பகுதி சாஸ்தா கோயில்களில் வியாழக்கிழமை  சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஆத்தூர் பழையகிராமம்  அருள்மிகு  தர்மசாஸ்தா திருக்கோயில், ஆத்தூர் ஆற்றங்கரை அருள்மிகு திட்டுமுட்டு சாஸ்தா திருக்கோயில், முக்காணி காணியாள அய்யனார் திருக்கோயில், சொக்கப்பழங்கரை அருள்மிகு வன்னிவுடையார் சாஸ்தா திருக்கோயில், உமரிக்காடு அருள்மிகு கோட்டைவாழ் ஐயன் திருக்கோயில், வாழவல்லான் அருள்மிகு பச்சைபெருமாள் ஐயனார் திருக்கோயில்,  சேர்ந்தபூமங்கலம் அருள்மிகு நல்லுடையார் சாஸ்தா திருக்கோயில், கீரனூர் அருள்மிகு மாகாளி அம்பாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஆத்தூர் சுற்றுவட்டாரம் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிக்கணக்கான  பக்தர்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து பொங்கலிட்டு தங்கள் குலதெய்வத்தை வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com