உடன்குடி, காயல்பட்டினத்தில் கனிமொழி வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர்

தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காயல்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். 
அப்போது அவர் பேசியதாவது:
 தமிழகத்தை வஞ்சிக்க நினைப்போர் மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டுமெனில் திமுக தலைவர் ஸ்டாலிலின் தலைமையில் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். இது உங்கள் கையில் தான் உள்ளது.  ஜிஎஸ்டி வரிவிதிப்பால் சிறிய வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.  இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் காக்க திமுக வேட்பாளர் கனிமொழிக்கு வாக்களியுங்கள் என்றார் அவர்.
திமுக வேட்பாளர் கனிமொழி பேசுகையில், நாட்டை காயப்படுத்திக் கொண்டிருக்கும் கட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். இதற்கு மாற்றத்தை கொண்டு வரவேண்டும். நீங்கள் நினைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்றார். நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகரச் செயலாளர் முத்து முகம்மது, மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மதிமுக நகரச் செயலர் பத்ரூதீன், மாவட்டப் பொருளாளர் காயல் அமானுல்லா, முஸ்லிலிம் லீக் மன்னர் பாதுல்அஸ்ஹப் மற்றும் கூட்டணி கட்சியினர்  கலந்து கொண்டனர்.
உடன்குடி ஒன்றியத்துக்குள்பட்ட  பரமன்குறிச்சி,  அய்யனார் நகர்,பொத்தரங்கன்விளை,பரமன்குறிச்சி கஸ்பா,வெள்ளாளன்விளை,நயினார்புரம், வட்டன்விளை, குருநாதபுரம், சீருடையார்புரம்,வீரப்பநாடார்குடியிருப்பு, செம்மறிக்குளம், மெஞ்ஞானபுரம், பூலிகுடியிருப்பு, கல்விளை, ராமசுப்பிரமணியபுரம், நங்கைமொழி,மருதூர்கரை, செட்டியாபத்து, தேரியூர்,வாகைவிளை, வேப்பங்காடு, அடைக்கலாபுரம், இலங்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனிமொழி வாக்கு சேகரித்தார்.
அவருடன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் வி.பி.ராமநாதன், முன்னாள் எம்பி.எஸ்.ஆர்.ஜெயதுரை உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com