கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் வாக்குப்பதிவு பயிற்சி

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்க முகாம் கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்க முகாம் கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்; கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 100  சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும்; 18  வயது நிரம்பியவர்கள் வாக்காளர்களாக பெயரைப் பதிவு செய்ய வேண்டும்; வாக்குப்பதிவு ஜனநாயகத்தின் கடமை ஆகியவை குறித்து  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  இலுப்பையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் பரமசிவன் தலைமை வகித்து,  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது; யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிபடுத்தும் வாக்கு ஒப்புகைச் சீட்டை அதற்கான கருவியிலிருந்து எப்படி பெறுவது என்பன குறித்து செயல்விளக்கம் அளித்தார். இதில், வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com