தூத்துக்குடி துறைமுக சரக்குப் பெட்டக தளத்தை ஆழப்படுத்த திட்டம்: கலந்துரையாடல் கூட்டத்தில் தகவல் 

தூத்துக்குடி துறைமுக சரக்குப் பெட்டக தளத்தின் ஆழத்தை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, சென்னை

தூத்துக்குடி துறைமுக சரக்குப் பெட்டக தளத்தின் ஆழத்தை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, சென்னை மற்றும் மும்பையைச் சேர்ந்த ஏற்றுமதி- இறக்குமதி நிறுவன நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி வஉசி துறைமுகம் வழியாக சரக்குகளை கையாளும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவன நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் மும்பை மற்றும் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில், துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன், துணைத் தலைவர் நா. வையாபுரி ஆகியோர் பங்கேற்று கருத்துகளை கேட்டறிந்தனர்.
இதுகுறித்து வஉசி துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வஉசி துறைமுகத்தில் சரக்கு கையாளும் தொழிலாளர்களின் கட்டணத்தை டன் ஒன்றுக்கு 70 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது குறித்தும், கடலோர வேலைவாய்ப்பு மையத் திட்டத்தின் மூலமாக குறைந்த குத்தகைக்கு துறைமுக நிலங்களை துறைமுகம் சார்ந்த தொழில்கள் தொடங்குவதற்காக வழங்குவது என்றும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், துறைமுகத்தின் மிதவை ஆழம் 14.50 மீட்டராக வடக்கு சரக்குதளம்- 1, நிலக்கரி தளம் -1, சரக்குதளம்- 8 மற்றும் 9 ஆகிய கப்பல் தளங்கள் இன்னும் 2 மாதங்களுக்குள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மொத்த சரக்கு கையாளுபவர்களுக்கு அவர்கள் கொண்டுவரும் சரக்குகளுக்கு ஏற்ப சரக்கு கையாளும் கட்டணங்கள் குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 
இரண்டாவது கட்டமாக சரக்குதளங்கள் மிதவை ஆழம் 15.50 மீட்டராக உயர்த்தப்பட உள்ளது. மூன்றாவது கட்டமாக 1000 மீட்டருக்கு மேலான நீளமுள்ள சரக்கு பெட்டக தளம் 18 மீட்டர் மிதவை ஆழத்துடன் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டங்கள் நிறைவுபெறும் தருணத்தில் முக்கிய வழித்தட சரக்குப் பெட்டக கப்பல்கள் வஉசி துறைமுகத்தில் சரக்கு பரிமாற்ற முனையமாக செயல்படுத்தப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் சரக்குப் பெட்டகங்களை கையாளுவதின் கூட்டு வளர்ச்சி 8 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சியின் மூலமாக வஉசி துறைமுகம் 7.03 லட்சம் சரக்குப் பெட்டகங்களை கையாண்டு சாதனை படைத்துள்ளது. மேலும், வரும் நிதியாண்டின் முடிவில் வஉசி துறைமுகம் ஒரு மில்லியன் சரக்குப் பெட்டகங்களை கையாளும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com