கயத்தாறில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கயத்தாறில் 100  சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வருவாய்த் துறை


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கயத்தாறில் 100  சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வருவாய்த் துறை சார்பில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. 
வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும், தேர்தல் குறித்த சந்தேகங்களைக் கேட்டுப்பெற தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள இலவச செல்லிடப்பேசி எண் (1950) குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும், கயத்தாறில் பல்வேறு இடங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,  பாய் தயாரிக்கும் தொழிற்சாலை, செங்கல் சூளை உள்ளிட்ட பகுதிகளில் பாதசாரிகள், பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. 
இதில், கயத்தாறு வட்டாட்சியர் லிங்கராஜ், வருவாய் ஆய்வாளர் காசிராஜன், கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 காயல்பட்டினத்தில்..
ஆறுமுகனேரி, மார்ச் 23: காயல்பட்டினம் நகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மனிதச் சங்கிலி, உறுதிமொழி எடுத்தல் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
நகராட்சி முன்பாக நடைபெற்ற வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, நகராட்சி தேர்தல் மண்டல அலுவலர் ரஞ்சித் தலைமை வகித்தார். ஆணையர் முருகன் முன்னிலையில் 100 சதவீத வாக்களிப்பு  உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பின்னர் நகராட்சி முன்பிருந்து புறப்பட்ட பேரணி, குத்துக்கல் தெரு, தைக்கா தெரு வழியாக தனியார் வங்கி முனை அருகே வந்த பின்னர், அங்கு வாக்காளர் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது.
பின்னர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வுக் கூட்டத்தில், சுகாதாரா ஆய்வாளர் பொன்வேல்ராஜன், தூய்மை இந்தியா திட்ட பணியாளர் ரமேஷ், வைரநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com