காரைக்கால் அம்மையார் கோயிலில் குருபூஜை விழா
By DIN | Published On : 24th March 2019 01:06 AM | Last Updated : 24th March 2019 01:06 AM | அ+அ அ- |

குலசேகரன்பட்டினம் அருள்மிகு காரைக்கால் அம்மையார் கோயிலில் குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அம்மையாரின் முக்தி தினமாகிய பங்குனி சுவாதியையொட்டி நடைபெற்ற இவ்விழாவில், திருநெல்வேலி காரைக்கால் அம்மையார் பக்த ஜனசபை வழிபாட்டுக் குழுத் தலைவர் முத்துக்குமார சுவாமி தலைமையில், அம்மையாரின் முழு பதிகமும் வரலாற்றுப் புராணமும் முற்றோதப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. பிற்பகல் 1 மணிக்கு தேனி சக்திவேல் குழுவினரின் பண்ணிசைப் பாடப்பட்டது. ஓதுவார்களின் திருமுறை இன்னிசை நடைபெற்றது.
இதில், காளியப்பன், அகத்தீஸ்வரன், கனகசபாபதி உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை சிவனடியார்கள் ஆ.இல்லங்குடி, சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.