Enable Javscript for better performance
அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழக கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் புதன்கிழமை நடைபெற்றது. 
    லட்சுமி மில் ஐ.என்.டி.யூ.சி. சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, தென்மண்டல அமைப்புச் செயலர் ஜெயரட்சகன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கருப்பசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    மாவட்ட ஐ.என்.டி.யூ.சி. பொதுச் செயலர் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். கேந்திர வித்யாலயா பள்ளி கோவில்பட்டியில் அமைக்க வேண்டும். மருத்துவர் சமுதாய மக்களுக்கு 5 சதவீத உள்ஒதுக்கீடு தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
    தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற கடுமையாக உழைப்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
    கூட்டத்தில், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத் தலைவர் வெங்கடசாமி, தொழிலாளர் சேமநல நிதி சங்கச் செயலர் ராமசுப்பு, செயற்குழு உறுப்பினர் வரதராஜ பெருமாள், நகரச் செயலர் மகேஸ்வரி, ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராமசாமி, கவிமணி விநாயகம் பிள்ளை தொழிற்சங்கத்தைச் சேர்ந்த அய்யாபிள்ளை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai