Enable Javscript for better performance
இரவு நேரங்களில் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்: தேர்தல் பார்வையாளர் சீமா ஜெயின்- Dinamani

சுடச்சுட

    

    இரவு நேரங்களில் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்: தேர்தல் பார்வையாளர் சீமா ஜெயின்

    By DIN  |   Published on : 28th March 2019 06:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் இரவு நேரங்களில் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றார் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான பொது பார்வையாளர் சீமா ஜெயின்.
    தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பணி அலுவலர்கள், பறக்கும்படை அலுவலர்கள், நிலையான குழு அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசியது: இரவு நேரங்களில் தேர்தல் விதிமீறல்கள் அதிகளவில் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே கூடுதல் கவனத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
    சரியான நேரத்தில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டால்தான் சிறப்பாக அமையும். பறக்கும்படையில் உள்ள அலுவலர்கள் 8 மணி நேர பணியிலும் மிகுந்த கவனத்துடன் துரிதமாக செயல்பட வேண்டும். எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அவற்றை முழுமையாக கண்காணிக்க வேண்டும். வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதால், பறக்கும் படையினர் இருக்கும் இடத்தை தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணிக்கும்.
    எனவே, ஒரே இடத்தில் அதிகநேரம் இருக்காமல் பல்வேறு இடங்களுக்குச் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.
    கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி பொது பார்வையாளர் மாதவி லதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப. ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
    முன்னதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பொது பார்வையாளர் சீமா ஜெயின் பார்வையிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai