Enable Javscript for better performance
கோவில்பட்டி, திருச்செந்தூரில் வாகனச் சோதனை: ரூ. 2.21 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி, திருச்செந்தூரில் வாகனச் சோதனை: ரூ. 2.21 லட்சம் பறிமுதல்

    By DIN  |   Published on : 28th March 2019 06:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி அருகே கரிசல்குளத்தில் சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் ரூ.1.70 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். 
    பசுவந்தனை சாலை கரிசல்குளத்தில் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரியும், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக கண்காணிப்பாளருமான பாலசுந்தரம் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தளவாய்ஜம்புநாதன், போலீஸார் பாண்டி, சரவணகுமார் ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். 
    அப்போது, கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த சண்முகராஜ் மகன் சிவகுமார் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.1.70 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.  அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கோவில்பட்டி சார்நிலைக் கருவூல அதிகாரியிடம் ஒப்படைத்தனர். 
    திருச்செந்தூரில்...
    திருநெல்வேலி மாவட்டம் வி.கே. புரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். தனியார் பால் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் புதன்கிழமை திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு பால் ஏற்றிக்கொண்டு வந்து திருச்செந்தூர் பகுதியில் விநியோகம் செய்துள்ளார்.
    பின்னர் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது ராணி மகாராஜபுரம் விலக்கு அருகே பறக்கும் படை அதிகாரி அருணா பிரபாயினி தலைமையிலான அதிகாரிகள் வாகனத்தை மறித்து சோதனையிட்டனர்.  அப்போது உரிய ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ.51 ஆயிரத்து 760-ஐ அவர்கள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai