Enable Javscript for better performance
திருச்செந்தூர் பகுதியில் மார்ச் 28 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் பகுதியில் வியாழக்கிழமை (மார்ச் 28) மின் தடை செய்யப்படுகிறது.
    இது குறித்து திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் இரா.பிரபாகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் கோட்டத்துக்குள்பட்ட ஆறுமுகனேரி உபமின் நிலையத்திலிருந்து ஆத்தூர் உபமின் நிலையத்துக்கு புதிய 33 கே.வி. பீடர் நிறுவும் பணி வியாழக்கிழமை நடைபெறவுள்ளதால், காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, ஆலந்தலை, கல்லாமொழி, காயாமொழி, கரம்பவிளை, அமலிநகர், தோப்பூர், குமாரபுரம், ராணிமகாராஜபுரம், பள்ளத்தூர், சண்முகபுரம், கோயில்விளை, கிருஷ்ணாநகர் ஆகிய பகுதிகளுக்கும், ஆறுமுகனேரி  உபமின் நிலையத்திலிருந்து 11 கே.வி. புன்னக்காயல் பீடர் மூலமாக மின்னூட்டம் பெறும் ஆத்தூர், தெற்குஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், புன்னக்காயல், கீரனூர், மேலஆத்தூர், சுகந்தலை, சொக்கப்பழக்கரை, ஆத்தூர் நீரேற்று நிலையம் ஆகிய பகுதிகளுக்கும், காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai