Enable Javscript for better performance
பானையில் ஓவியம் வரைந்து தேர்தல் விழிப்புணர்வு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நாட்டு நலப்பணித் திட்டத்தின்கீழ், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவர்-மாணவிகள் கலந்துகொண்டு பானையில் பல்வேறு ஓவியங்களை வரைந்தனர்.
    "வாக்கு' கருத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியை, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய (பொ) முதல்வர் ப. வேலாயுதம் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, அவர் பேசுகையில், மாணவர், மாணவிகள் தவறாமல் வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.
    நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் த. ரவிகுமார், மாணவர் சங்க துணைத் தலைவர் வீரபத்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai