Enable Javscript for better performance
பேய்க்குளத்தில் திமுக பிரசார பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் பிரசார பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
    ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய திமுக செயலர் எஸ். பார்த்திபன் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் கோயில்ராஜ், ஆழ்வார்திருநகரி பேரூராட்சி செயலர் முத்துராமலிங்கம்,  காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலர் பிச்சிவிளை வி.எம். சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    மாநில திமுக பேச்சாளர்கள் நெல்லை ரவி, அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
    முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ் பேசியது: ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சியை தத்தெடுத்து பல நலத் திட்டங்களை கனிமொழி எம்பி தந்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய அனைத்து தகுதியும் உள்ள திமுக வேட்பாளருக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார் அவர். 
    இதில், ஒன்றிய திமுக செயலர்கள் சாத்தான்குளம் ஏ.எஸ். ஜோசப்,  உடன்குடி பாலசிங், கருங்குளம் நல்லமுத்து, சாத்தான்குளம் நகர காங்கிரஸ் தலைவர் ஆ.க. வேணுகோபால், நகர திமுக செயலர் மகா இளங்கோ, ஆழ்வார்திருநகரி ஒன்றிய துணைச் செயலர் சிவசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பேய்க்குளம் வட்டார காங்கிரஸ் செயலர் தாமஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பாசறைச் செயலர் ரகுபதி நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai