Enable Javscript for better performance
முடுக்குமீண்டான்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    முடுக்குமீண்டான்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி

    By DIN  |   Published on : 28th March 2019 06:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முடுக்குமீண்டான்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 
    முடுக்குமீண்டான்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணிக்கு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வீரராகவன் தலைமை வகித்து, பேரணியை தொடங்கிவைத்தார். 
    கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் கிரி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)  முருகானந்தம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பையா, சிவராமகிருஷ்ணன், குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் ஊராட்சி அலுவலகம் வந்தடைந்தது. தொடர்ந்து, 100  சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    மேலும், சத்துணவு அமைப்பாளர்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தியும், மக்களிடையே வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், கையில் மெஹந்தி மற்றும் ஊராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் கோலமிட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai