Enable Javscript for better performance
வணிகர்கள், பொதுமக்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறையில் விலக்கு அளிக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    வணிகர்கள், பொதுமக்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறையில் விலக்கு அளிக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 28th March 2019 06:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அமல்படுத்தப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளிலிருந்து வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள மனு: மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 
    இதையடுத்து, சாதாரண சிறு, குறு வியாபாரிகள், வணிகர்கள், பொதுமக்களின் அன்றாட நடைமுறைகளுக்கு இடையூறாக இருக்கும் வகையில் பல்வேறு இடங்களில் வாகனச் சோதனை நடைபெற்று வருகிறது. 
    அன்றாட வியாபாரத்திற்காக பொருள்கள் வாங்குவதற்கு மார்க்கெட் அல்லது அருகேயுள்ள பெரிய நகரங்களுக்கு செல்லும் பொதுமக்கள், வணிகர்கள் பணத்தை கொண்டு செல்லும்போது தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பதால் காலவிரயம் மற்றும் பண முடக்கம் ஏற்படுகிறது.  
    எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகளில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் வரை பணம் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai