கலைப் போட்டிகள்: தூத்துக்குடி மீன்வளகல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்
By DIN | Published On : 28th March 2019 06:50 AM | Last Updated : 28th March 2019 06:50 AM | அ+அ அ- |

மீன்வளக் கல்லூரிகளுக்கு இடையேயான கலைப்போட்டிகளில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவர், மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனர்.
சென்னை பொன்னேரியில் உள்ள எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற இப்போட்டியில், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர், மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றினர்.
விளையாட்டுப் பிரிவில் பந்து எறிதல் மற்றும் வாலிபால் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.
இதேபோல், மும்பையில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் "அக்வாஜியோ போனிக்ஸ்' என்ற தலைப்பில், இக்கல்லூரி முதுநிலை இரண்டாமாண்டு மாணவர் இரா. தமிழ்ச்செல்வன் எழுதிய கட்டுரைக்கு சிறந்த படைப்புக்கான இரண்டாவது பரிசு மற்றும் ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளை கல்லூரி முதல்வர் வேலாயுதம் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...