தூத்துக்குடியில் வீடுகளில் தேர்தல் விழிப்புணர்வு "ஸ்டிக்கர்'

தூத்துக்குடியில் வீடுகள்தோறும் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய  ஒட்டு வில்லைகள் (ஸ்டிக்கர்) ஒட்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடியில் வீடுகள்தோறும் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய  ஒட்டு வில்லைகள் (ஸ்டிக்கர்) ஒட்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 மக்களவைத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், அனைத்து வீடுகளிலும் தேர்தல் விழிப்புணர்வு "ஸ்டிக்கர்' ஒட்டும் பணி தொடக்க  நிகழ்ச்சி ஆணையர் வீ.ப. ஜெயசீலன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
 மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பொது தேர்தல் பார்வையாளர் சீமா சர்மா ஜெயன் ஆகியோர் பணியை தொடங்கிவைத்தனர். மேலும், அதிநவீன  எல்இடி திரை வசதி கொண்ட பிரசார வாகனம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு மேற்கொள்ளும் பணியையும் அவர்கள் தொடங்கிவைத்தனர்.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட வாகனங்களையும் ஆட்சியர்  கொடியசைத்து தொடங்கிவைத்தார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில்  1 லட்சத்து 40 ஆயிரம் வீடுகளில் விழிப்புணர்வு "ஸ்டிக்கர்' ஒட்டப்பட உள்ளதாக ஆணையர் வீ. ப. ஜெயசீலன் தெரிவித்தார். 
நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வெ. சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சையத் முகம்மது மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com