ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல்: திமுக, அதிமுக, அமமுக, மநீம வேட்புமனுக்கள் ஏற்பு

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரிசீலனையில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் உள்ளிட்ட 18 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஏப். 22 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், மொத்தம் 41 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதில், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் க. சுகுமார் தலைமையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மலர்தேவன், சிவகாமசுந்தரி, தேர்தல் அதிகாரிகள் முருகானந்தம், நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் பங்கேற்றனர். மனுக்கள் மீதான பரிசீலனை காலை 11 மணிக்கு தொடங்கி, மதியம் ஒருமணி வரை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி கட்சியான வளரும் தமிழகம் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 18 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்படுவதாகவும், 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் கூறுகையில், ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 34 வேட்பாளர்கள் சார்பில் 41 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றில், 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது 18 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில், மனுவை திரும்பப் பெற விரும்புவோர் மே 2-ஆம் தேதி காலை 11 மணி முதல் 3 மணி வரை மனு அளிக்கலாம். அன்றைய தினமே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு அவர்களுக்குரிய சின்னங்கள் ஒதுக்கப்படும் என்றார்.
தொகுதியில் தற்போது, அதிமுக வேட்பாளர் பெ. மோகன், திமுக வேட்பாளர் எம்.சி. சண்முகையா, அமமுக வேட்பாளர் ஆர். சுந்தர்ராஜ், நாம் தமிழர் கட்சி மு. அகல்யா, மக்கள் நீதி மய்யம் மு. காந்தி, சுயேச்சைகள் ச. அக்ரி பரமசிவன், க. உதயசெல்வன், ராஜீவ், சிஎம் ராகவன், மாரியப்பன், மள்ளர் மகராஜன்,  எட்டப்பன், தர்மர், சின்னசாமி, சமுத்திரம், முருகன், பாலகிருஷ்ணன், சு. கோவிநாத் உள்ளிட்ட 18 பேர் களத்தில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com