நாசரேத்தில் ஏழைகளுக்கு நல உதவிகள்

நாசரேத்தின் தந்தை எனப் போற்றப்படும் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் ஐயரின் 111ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நாசரேத்தின் தந்தை எனப் போற்றப்படும் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் ஐயரின் 111ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, தூய யோவான் பேராலயத்தில்  நற்கருணை ஆராதனை, பேராலய தலைமைக் குரு எட்வின் ஜெபராஜ் தலைமையில் நடைபெற்றது. உதவி குரு இஸ்ரவேல் ஞானராஜ் முன்னிலை வகித்தார்.  தொடர்ந்து, மர்காஷிஸ் ஐயரின் கல்லறையில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி, 1200 பேருக்கு அரிசி, புத்தாடைகள்  வழங்கப்பட்டன.  முன்னாள் எம்.பி. ஏ.டி.கே.ஜெயசீலன் , நாசரேத் தூய யோவான் பேராலய அசன கமிட்டி தலைவர் ஆர்.லேவி அசோக் சுந்தர்ராஜ், திருமண்டில பெருமன்ற உறுப்பினர் செல்வின், சேகர கமிட்டி உறுப்பினர்கள் லயன் புஷ்பராஜ், ராஜேந்திரன், ஜேஸ்பர், ஓய்வு பெற்ற ஆசிரியர் உலகராஜ், மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் ஏ.டி.ஹெச்.சந்திரன், சேகர எழுத்தர் அகஸ்டின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.மற்றொரு நிகழ்ச்சியாக, மர்காஷியஸ் இசை ஐக்கிய குழு சார்பில் ஏழைகள் 217 பேருக்கு அரிசி, பருப்பு வழங்கப்பட்டது. திருமறையூர் முதியோர் இல்லம் மற்றும் மன வளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் மூவேளையும் உணவு வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் மனோகரன், தூய யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் சாந்தகுமாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com