கொம்பன்குளம்-புதுக்குளம் இணைப்புச் சாலை பணி தொடங்கப்படுமா?

சாத்தான்குளம் அருகே நிதி ஒதுக்கீடு செய்தும் கொம்பன்குளம் - புதுக்குளம் சாலைப் பணி தொடங்கப்படாததால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

சாத்தான்குளம் அருகே நிதி ஒதுக்கீடு செய்தும் கொம்பன்குளம் - புதுக்குளம் சாலைப் பணி தொடங்கப்படாததால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 
சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளத்திலிருந்து கொம்பன்குளத்திற்கு கீழக்குளம் வழியாக சுமார் 2 கி.மீ. தொலைவில்  இணைப்புச் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கொம்பன்குளம், கீழக்குளம் மக்கள் எளிதில் புதுக்குளம் வந்து செல்கின்றனர். இந்த சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது. 
இந்நிலையில் நிகழாண்டு கொம்பன்குளம் - புதுக்குளம் சாலை அமைக்க ரூ. 69.49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான அறிவிப்பு பலகையும் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வைக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படாமலேயே உள்ளது.நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் சாலைப்பணி தொடங்கப்படாததால் கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்து சாத்தான்குளம் வட்டார விவசாய பிரிவு காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி கூறுகையில், மக்கள் பயன்பெறும் வகையில் இந்த சாலைப்பணியை உடனடியாக தொடங்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட உள்ளேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com