ஓட்டப்பிடாரத்தில் போலீஸார் அணிவகுப்பு

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் 19 இல் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி காவல்துறையினர் பங்கேற்ற அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.


ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் 19 இல் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி காவல்துறையினர் பங்கேற்ற அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்ற இந்த பாதுகாப்பு ஒத்திகை அணிவகுப்புக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் காவல்நிலையம் முன்பு இருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பு முக்கிய பஜார் பகுதி வழியாக முப்புலிவெட்டி கிராமத்தில் முடிவடைந்தது. இதில், ஏ.டி.எஸ்.பி. பொன்ராம், மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆயுதப்படை, மணிமுத்தாறு சிறப்புகாவல்படை, ஊர்க்காவல்படை மற்றும் உள்ளூர் காவலர்கள் கலந்து கொண்டனர். 
பின்னர் எஸ்.பி. செய்தியாளர்களிடம் கூறியது: ஓட்டப்பிடாரம் பேரவைத்தொகுதி இடைத்தேர்தலையொட்டி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இத்தொகுதியில் 293 கிராமங்கள் உள்ளன. கிராமங்களை 88 பிரிவுகளாக பிரித்து காவல்ஆய்வாளர், உதவி ஆய்வாளர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
இத்தொகுதியில் 90 நிலையான கண்காணிப்பு குழு, பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட எல்லைகள் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டப்பிடாரத்தை சுற்றிலும் 23 சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு 3 கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வருகை தந்துள்ளனர். தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3 கம்பெனி தயாராக உள்ளது. மேலும், பிற மாவட்டங்களில் இருந்து 600 போலீஸார் பாதுகாப்பு பணிக்கு வருகை தந்துள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
நாசரேத் பரிசுத்த பரலோக அன்னை
ஆலயத்தில் அசன விருந்துசாத்தான்குளம், மே 5: நாசரேத்-பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் அசன விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி, ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலிக்கு பங்குத்தந்தை தோமாஸ் தலைமை வகித்தார்.  திருப்பலியை தொடர்ந்து பங்குத்தந்தை ஜெபம் செய்து அசன விழாவை தொடங்கி வைத்தார். பின்னர், அசன விருந்து பரிமாறப்பட்டது. இதில்  பிரகாசபுரம் பரிசுத்த திரித்துவ ஆலய குரு அல்பர்ட் ஜெயசிங் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com