தேர்தல் முடிந்ததும் ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம்: அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

தேர்தல் முடிந்ததும் ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைக்கப்படும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தெரிவித்தார்.


தேர்தல் முடிந்ததும் ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைக்கப்படும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தெரிவித்தார்.
 ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பெ. மோகனை ஆதரித்து சொக்கலிங்கபுரம், செக்காரக்குடி, பொட்டலூரணி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது 
அவர் பேசியது: அதிமுக அரசால் செக்காரக்குடி பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும், ரூ. 2 லட்சம்  செலவில் புதிய கட்டடமும் கட்டப்பட்டது.  2011, 2016 இல் நடைபெற்ற தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அனைத்துத் திட்டங்களையும் அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது.
மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள், புத்தகம் மற்றும் சீருடை போன்ற அரசின் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனார் பிறந்த ஓட்டப்பிடாரத்தில் அவரது நினைவிடத்தில் வெண்கலசிலை அமைத்தது அதிமுக அரசு. தேர்தல் முடிந்ததும் ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைக்கப்படும் என்றார் அவர்.
அவருடன், வேட்பாளர் பெ. மோகன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம், மாவட்ட இளைஞரணி செயலர் தளபதி க. பிச்சையா, நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com