தமிழகம் மின்மிகை மாநிலம்: கே.டி. ராஜேந்திர பாலாஜி

மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது என்றார் பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி.

மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது என்றார் பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி.
தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
 மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமல் மின்மிகை மாநிலமாக  தமிழகம் மாறி உள்ளது.  அதிமுக ஆட்சியை ஏழை மக்களும், நடுத்தர மக்களும் விரும்புகின்றனர். திமுக ஆட்சி வரக் கூடாது என மக்கள் விரும்புகின்றனர்.  சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டிய நல்ல திட்டங்களுக்கு எல்லாம் நீதிமன்றம் சென்று தடை பெறுவது திமுகவுக்கு வாடிக்கை. 
3 பேரவை உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவைத் தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் அவர்கள் மூவரும் சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்து உரிய விளக்கத்தை அளித்திருந்தால் அவர் முடிவு எடுத்திருப்பார்.
 இந்த விவகாரத்தில்  திமுக தலைவர் ஸ்டாலினும், டிடிவி தினகரனும் மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் ரகசியமாக சந்தித்து எடுத்த முடிவை தற்போது நிறைவேற்றி வருகின்றனர். 
மத்தியில் மீண்டும் பிரதமராக மோடி வருவார்.  தமிழகத்தில் அதிமுக ஆட்சி எவ்வித தடையுமின்றி தொடரும்.  ஸ்டாலினால் தமிழகத்தில் முதல்வராக வர முடியாது. 
தமிழகத்தில் தொலைநோக்கு திட்டத்தால் அதிமுக அரசு உயர்கல்வித் துறையில் நல்ல முன்னேற்றம் கொண்டு வந்ததால் தில்லி மட்டுமன்றி அனைத்து பகுதிகளிலும் தமிழக மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைதேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி தொடரும்.  திமுகவாலும், தினகரனாலும் ஆட்சியை ஏதும் செய்ய முடியாது.  சட்டப்பேரவைத் தலைவர் மீது திமுக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ரகசிய வாக்கெடுப்பு வைத்தால் திமுகவைச் சேர்ந்த 40 பேருக்கும் குறையாத சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளனர் என்றார் அவர். 
தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆலோசனை நடத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com