முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
கல்லூரி மாணவரை தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநர் கைது
By DIN | Published On : 15th May 2019 06:51 AM | Last Updated : 15th May 2019 06:51 AM | அ+அ அ- |

கழுகுமலை அருகே கல்லூரி மாணவரை தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும், இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கழுகுமலையையடுத்த கரடிகுளம், சி.ஆர்.காலனியைச் சேர்ந்தவர் குமாரவேல் மகன் யோகக்குமார்(21). திருச்செங்கோட்டிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பயிலும் இவர் ஊர் திருவிழாவிற்காக வெள்ளிக்கிழமை(மே. 10)ஆம் தேதி அவரது உறவினர் முகேஷ் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த வேலு மகன் ஆட்டோ ஓட்டுநர் ஜெயக்குமார்(21) ஓட்டி வந்த ஆட்டோ, பைக்கின் மீது மோத முயன்றததாம். அதையடுத்து, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதையடுத்து, வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த யோகக்குமாரை, ஆட்டோ ஓட்டுநர் ஜெயக்குமார் மற்றும் அவரது உறவினர்களான பாலமுருகன், புதுக்கோட்டையைச் சேர்ந்த ரெங்கசாமி ஆகியோர் தாக்கினார்களாம். இதுகுறித்து, கல்லூரி மாணவர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, அவரை தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய பாலமுருகன், ரெங்கசாமி ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.