முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
மூக்குப்பீறி கோயிலில் திருவிளக்கு பூஜை
By DIN | Published On : 15th May 2019 06:49 AM | Last Updated : 15th May 2019 06:49 AM | அ+அ அ- |

மூக்குப்பீறி அருள்மிகு ஸ்ரீசந்தனமாரியம்மன் கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி அம்பாள்நகர் அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் மற்றும் கொடை விழா திங்கள்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை 2 நாள்கள் நடைபெற்றது. முதல்நாளான திங்கள்கிழமை காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், தீபாராதனையும், காலை 9 மணிக்கு அம்பாள், விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு மாக்காப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 7மணிக்கு இந்து அன்னையர் முன்னணி சார்பில் 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பெண்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பூஜையில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், தூத்துக்குடிமாவட்ட இந்து முன்னணி பொதுச் செயலர் பெ. சக்திவேல், நாசரேத் நகர இந்து முன்னணி தலைவர் வெட்டும்பெருமாள், துணைத்தலைவர் ஓம் சக்தி தியாகராஜன், செயற்குழு உறுப்பினர் ரெங்கன், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய இந்து முன்னணி துணைத்தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
2ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு அம்பாள் கும்பம் வீதி உலா வருதல், பிற்பகல் 1 மணிக்கு மதியக்கொடை, இரவு 7.30 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு 10.30 மணிக்கு அலங்கார பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. நள்ளிரவில் சாமக் கொடை நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.