Enable Javscript for better performance
ஆறுமுகனேரி செல்வவிநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரி விநாயகர் கோயில் தெருவில் அமைந்துள்ள இரட்டை பிள்ளையார் என்றழைக்கப்படும் அருள்மிகு செல்வ விநாயகர், அருள்மிகு அழகிய சுந்தர விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்  வியாழக்கிழமை நடைபெற்றது.
    இதையொட்டி,  காலை 6 மணிக்கு கணபதி ஹோமம்,  யாகசாலை  பூஜை,  கும்ப பூஜை  நடைபெற்றது. பின்னர் காலை 9 மணிக்கு  விமான அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது.
    விழாவில் சைவ வேளாளர் சங்கத்  தலைவர் ஜெ.சங்கரலிலிங்கம்,  பொருளாளர் சே. கற்பகவிநாயகம், டி.சி.டபிள்யூ சுப்பிரமணியன், சுடலைமுத்து  பிள்ளை உள்பட  திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai