சந்தையடியூர் முத்தாரம்மன் கோயில் கொடை விழா
By DIN | Published on : 17th May 2019 07:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உடன்குடி சந்தையடியூர் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் சித்திரைக் கொடை விழா நான்கு நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி மே 13 ஆம் தேதி இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகம், நள்ளிரவு 12 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை, தொடர்ந்து கும்பம் வீதியுலா நடைபெற்றது. மே 14 ஆம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு செங்கிடகார சுவாமிக்கு சிறப்பு பூஜை, பிற்பகல் 1 மணிக்கு அபிஷேகம், கும்பம் வீதியுலா, இரவு 10 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் ஆகியவை நடைபெற்றது.
மே 15 ஆம் தேதி பகல் 1 மணிக்கு கும்பம் வீதியுலா, மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. மே15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கற்பக பொன்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதியுலா வந்தார். நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை, லட்சார்ச்சனை நடைபெற்றது.
மே 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு கொடை விழா நிறைவு பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை ஊர்த்தலைவர் சி.சரவணக்குமார், செயலர்கள் கதிர்வேல், கணேசன், பொருளாளர் ரதீஷ்கண்ணன் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.