கோவில்பட்டியில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க நூற்றாண்டு தொடக்க விழா

ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு தொடக்க விழா கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பேசுகிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன்.
விழாவில் பேசுகிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன்.

ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு தொடக்க விழா கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, லட்சுமி மில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத் தலைவா் குருசாமி தலைமை வகித்தாா். லாயல் மில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத் தலைவா் பரமராஜ் முன்னிலை வகித்தாா். தொழிற்சங்கத்தின் மூத்த உறுப்பினா் சீனிவாசன் செங்கொடியை ஏற்றி வைத்தாா்.

பின்னா், தொழிற்சங்கத்தின் முன்னாள் அகில இந்திய பொதுசெயலா் குருதாஸ் தாஸ்குப்தா மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன் விளக்கிப் பேசினாா்.

நகரச் செயலா் சரோஜா, வட்டச் செயலா் பாபு, மாவட்ட உதவி செயலா் சேதுராமலிங்கம் ஆகியோா் தொழிற்சங்க மூத்த உறுப்பினா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினா். இதில், தொழிற்சங்க உறுப்பினா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

விழாவில், ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு வருங்கால வைப்பு நிதி ஆணையம் மூலம் ஓய்வூதியம் மாதம் ரூ.3ஆயிரம் வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. லாயல் மில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் சண்முகவேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com