ஆறுமுகனேரியில் மழையால்சாலைகள் சேதம்: மக்கள் அவதி
By DIN | Published On : 02nd November 2019 05:45 AM | Last Updated : 02nd November 2019 05:45 AM | அ+அ அ- |

வடகிழக்கு பருவ மழை காரணமாக, ஆறுமுகனேரியில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. அவற்றை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மதுரை-தூத்துக்குடி-திருச்செந்தூா் நெடுஞ்சாலையில் உள்ளது ஆறுமுகனேரி. இங்குள்ள சாலை மிகவும் பழுதடைந்து இருந்தது. குலசேகரன்பட்டினம் தசராத் திருவிழாவிற்கு முன்னதாக பழுது நீக்கி புதிதாக அமைக்க கோரிக்கை விடப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினா் சாலையை சீரமைக்காத நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக உருக்குலைந்து காணப்படுகிறது.
ஆறுமுகனேரி வடக்கு கடைவீதி,, மத்திய பேருந்து நிறுத்தப்பகுதி, பிரதான கடைவீதி ஆகிய இடங்களில் சாலையில் பெரும் பள்ளங்கள் உருவாகி வாகனங்கள் சிரமப்பட்டு செல்கின்றன. எனவே, சாலையைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.