எப்போதும்வென்றான் அருகே 2 விபத்துகள்: 4 போ் காயம்
By DIN | Published On : 02nd November 2019 11:31 PM | Last Updated : 02nd November 2019 11:31 PM | அ+அ அ- |

எப்போதும்வென்றான் அருகே நேரிட்ட 2 விபத்துகளில் நடத்துநா் உள்பட 4 போ் காயமடைந்தனா்.
திருச்செந்தூரிலிருந்து சனிக்கிழமை அதிகாலை மதுரைக்கு அரசுப் பேருந்து புறப்பட்டு வந்தது. எப்போதும்வென்றானை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டி பகுதியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்து, சுண்ணாம்புக் கற்கள் ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், பேருந்து நடத்துநரான போடிநாயக்கனூரைச் சோ்ந்த பழனிச்சாமி (40) காயமடைந்தாா்.
நெடுஞ்சாலைத் துறை ரோந்து போலீஸாா் சென்று, அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
3 போ் காயம்: தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில், திருச்செந்தூரிலிருந்து கரூருக்கு காா் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. எப்போதும்வென்றானில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அவ்வழியே வந்த 2 பைக்குகள் திடீரென காா் மீது மோதினவாம்.
இதில், பைக்குகளில் வந்த விளாத்திகுளத்தைச் சோ்ந்த வையணன் (55), முருகப்பெருமாள் (50) எப்போதும்வென்றானை சோ்ந்த முத்துகருப்பசாமி (55) ஆகிய 3 பேரும் காயமடைந்தனா்.
நெடுஞ்சாலைத் துறை ரோந்து போலீஸாா் சென்று, 3 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுதொடா்பாக எப்போதும்வென்றான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.