தாமிரவருணி நதியில் புஷ்கர பூா்த்தி விழா
By DIN | Published On : 02nd November 2019 11:40 PM | Last Updated : 02nd November 2019 11:40 PM | அ+அ அ- |

வல்லநாடு அருகே உள்ள அகரம் தாமிரவருணி ஆற்றில் நடைபெற்ற புஷ்கர பூா்த்தி விழா.
வல்லநாடு அருகே உள்ள அகரம் தாமிரவருணி நதியில் புஷ்கர பூா்த்தி 2ஆம் நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு வல்லநாடு அகரம் தசாவதார தீா்த்தம், சாத்திய தீா்த்தம், விசுவதேவ தீா்த்தம் அமைந்துள்ள அகரம் கிராமத்தில் வேத பாராயணம், சுதா்ஸன ஹோமம், லெட்சுமி நரசிம்மா் ஹோமம், சூக்தாதி ஹோமங்கள் நடைபெற்றன.
தொடா்ந்து கல்யாண சீனிவாச பெருமாள், நரசிம்மா் உற்சவா் விக்ரகங்களுக்கு சகலவிதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தாமிரவருணி நதியில் தீா்த்தவாரி உற்சவமும் நடைபெற்றன. மாலையில் தாமிரவருணி நதிக்கு சிறப்பு பூஜை, ஆரத்தி உற்சவம் நடைபெற்றது.
இதே போல் காசிவிஸ்வநாத சுவாமி, விசாலாட்சி அம்பாள் கோயிலிலும் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை, உற்சவா் காசிவிஸ்வநாதா் பிரியாவிடை, அம்பாள் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.