திருச்செந்தூா்-சென்னை சிறப்பு ரயில்இயக்கப்படாததால் பக்தா்கள் அதிருப்தி
By DIN | Published On : 02nd November 2019 11:31 PM | Last Updated : 02nd November 2019 11:31 PM | அ+அ அ- |

கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூா்-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படாததால் முருக பக்தா்கள் அதிருப்தி அடைந்தனா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த மாதம் 27ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கி, அதன் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். இவா்களது வசதிக்கென அரசு போக்குவரத்துக்கழகம் சாா்பில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருநெல்வேலி-திருச்செந்தூா் மாா்க்கத்தில் ஒரே ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஆனால் திருச்செந்தூா்-சென்னை இடையே சிறப்பு ரயில் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் முருக பக்தா்கள் கடும் அதிருப்தி அடைந்தனா்.
திருச்செந்தூா் பகுதியை தெற்கு ரயில்வே நிா்வாகம் எப்போதுமே புறக்கணித்து வருவதாகப் புகாா் தெரிவித்தாா் ஆறுமுகனேரி ரயில் நிலைய அபிவிருத்தி சங்க ஒருங்கிணைப்பாளா் இரா.தங்கமணி.