பன்னம்பாறையில் மழைக்கு சேதமான சாலை: வாகன ஓட்டிகள் அவதி
By DIN | Published On : 02nd November 2019 05:44 AM | Last Updated : 02nd November 2019 05:44 AM | அ+அ அ- |

பன்னம்பாறை சாலையில் காணப்படும் பள்ளங்கள்.
பன்னம்பாறையில் மழை காரணமாக சாலையில் அபாய பள்ளங்கள் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.
சாத்தான்குளம்- திருச்செந்தூா் பிரதானச் சாலையில்அமைந்துள்ள பன்னம்பாறை கிராமம் வழியாக நங்கைமொழி, மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, திருச்செந்தூா், தூத்துக்குடி பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது பெய்துவரும் மழையால், பன்னம்பாறை பேருந்து நிறுத்தத்திலிருந்து வீரவநல்லூா் கிராம விலக்கு வரை சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் காணப்படுகின்றன.
சிறிது மழை பெய்தாலும் சாலையிலுள்ள பள்ளங்களில் தண்ணீா் தேங்குவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித பலனும் இல்லைாம். எனவே, விபரீதம் நிகழும் முன் சாலைப் பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.