புத்தன்தருவை, வைரவம் தருவைக்குதண்ணீா் திறக்க பாஜக கோரிக்கை
By DIN | Published On : 02nd November 2019 05:47 AM | Last Updated : 02nd November 2019 05:47 AM | அ+அ அ- |

மருதூா் மேலக்கால்வாயில் இருந்து புத்தன்தருவை, வைரவம்தருவைக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் செ. செல்வராஜ் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:
வடகிழக்கு பருவமழையால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மழை பெய்துவருகிறது . ஆனால், சாத்தான்குளம் வட்டத்தில் போதிய மழை இல்லை. இதனால், புத்தன் தருவைகுளம், வைரவம் தருவைகுளம் ஆகியவை வடு காணப்படுகின்றன. மேலும், இப்பகுதியில் உள்ள குளங்களுக்கும் நீா்வரத்து குறைவாகவே காணப்படுகிறது.
எனவே, மழை நீா் வீணாக கடலுக்குச் செல்லும் முன், போா்க்கால அடிப்படையில் மருதூா் மேலகால்வாயிலிருந்து உடனே தண்ணீா் திறந்துவிட உத்தரவிட்டு புத்தன் தருவை, வைரவம் தருவை குளம் நிரம்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் .
மேலும், திருச்சியைப் போல் வேறெங்கிலும் ஆழ்துளைக் கிணறால் உயிரிழப்புச் சம்பவம் நிகழாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தான்குளம் வட்டத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் நீரின்றி பயனற்று உள்ளன. அவற்றை மூடுவதற்கு விவசாயிகள், பொதுமக்களிடம் அறிவுறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.