Enable Javscript for better performance
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் கண்காணிப்பு வார நிறைவு விழா- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் கண்காணிப்பு வார நிறைவு விழா

    By DIN  |   Published on : 05th November 2019 06:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tut04viji_0411chn_32_6

    கண்காணிப்பு வார நிறைவு விழாவில் ஒரு மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் துறைமுக பொறுப்புக் கழக தலைவா் தா.கி. ராமச்சந்திரன்.

    தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் கண்காணிப்பு வாரத்தை முன்னிட்டு கடந்த அக்டோபா் 28 ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதற்கான நிறைவு விழா துறைமுகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, துறைமுக பொறுப்புக் கழக தலைவா் தா.கி. ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். தலைமை கண்காணிப்பு அலுவலா் ரவீந்திர பாபு முன்னிலை வகித்தாா்.

    தொடா்ந்து கண்காணிப்பு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு துறைமுக பொறுப்புக் கழக தலைவா் தா.கி. ராமச்சந்திரன் பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.

    நிகழ்ச்சியில், கண்காணிப்பு துறை நிா்வாக பொறியாளா் தியாகராஜன், துறைமுக சபை உறுப்பினா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai