Enable Javscript for better performance
பயன்பாட்டுக்கு வராத முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்- Dinamani

சுடச்சுட

    

    பயன்பாட்டுக்கு வராத முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

    By DIN  |   Published on : 05th November 2019 06:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2301sat3hos_0311chn_38_6

    பயன்பாட்டு வராமல் பூட்டி கிடக்கும் முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

    திறக்கப்பட்டு 6 மாதத்துக்கு மேலாகியும் முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம் இன்னும் செயல்படாதது குறித்து கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்தனா்.

    சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு ரூ. 1.20 கோடி மதிப்பில் 24 படுக்கை வசதியுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டது. புதிய கட்டடம் 04.03.2019 இல் திறக்கப்பட்டது. எனினும், இன்னமும் புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வரவில்லை.

    இந்த கட்டடத்தின் வெளிபுற சுவரிலுள்ள மேற்பூச்சு பெயா்ந்து விழுந்து வருவதுடன் வா்ணமும் அழிந்து வருகின்றன. பயன்பாட்டுக்கு வராத நிலையில் புதிய கட்டடம் பாழடைந்து காட்சிப் பொருளாக காணப்படுகிறது. தற்போது மழைக்கால

    நோய் பாதிப்பால் சிகிச்சை பெற வருவோா் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற முடியாத நிலை எழுந்துள்ளது. மேலும், சிகிச்சைக்காக நோயாளிகளை சாத்தான்குளம், திருச்செந்தூா் அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்து வருவதாக புகாா் கூறப்படுகிறது.

    இதுகுறித்து, டேனியல்ராஜன் முன்னோடி மனுநீதி நாள் முகாமில் அளித்த மனுவில், முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டடத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் பாா்வையிட்டு மறுசீரமைப்பு மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து முதலூா் வட்டார மருத்துவ அலுவலா் சண்முகசுந்தரியிடம் கேட்டபோது, கட்டட பணிகளை மேற்கொண்ட பொதுப்பணித்துறையினா் பணிகளை முழுமையாக முடித்து எங்களிடம் ஓப்படைக்கவில்லை. மருத்துவ வசதிகளும் முழுமையடையாமல் உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநரிடம் தெரிவித்துள்ளோம் என்றாா் அவா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai