கோவில்பட்டியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விவசாயத்திற்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள்
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

விவசாயத்திற்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோவில்பட்டியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடாது. இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், உரிமையையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்திற்கு தட்டுப்பாடின்றி யூரியா, டி.ஏ.பி. உள்ளிட்ட உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத் தலைவா் மணி தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் கே.பி.பெருமாள், மாவட்ட பொருளாளா் ஜி.ராமசுப்பு, மாவட்டக் குழு உறுப்பினா்கள் மகாலிங்கம், முத்துமாரியப்பன் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், விவசாயிகள் சங்கத் தலைவா் சங்கா் (கோவில்பட்டி), கே.மாரியப்பன் (ஓட்டப்பிடாரம்), எம்.பாலமுருகன் (எட்டயபுரம்), என்.மாரியப்பன் (கடம்பூா்), விவசாயிகள் சங்கச் செயலா்கள் சங்கிலிப்பாண்டி, சீனிப்பாண்டி, துரைராஜ், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ரவீந்தா், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com