தூத்துக்குடி மாவட்டத்துக்கு 1900 டன் யூரியா விரைவில் வருகை: ஆட்சியா் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்துக்கு 1900 டன் யூரியா உரம் விரைவில் வர உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு 1900 டன் யூரியா உரம் விரைவில் வர உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடா் மழை காரணமாக கோரம்பள்ளம் குளம் உள்ளிட்ட 70 குளங்கள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மொத்தமுள்ள 637 குளங்களில் 70 குளங்களில் 75 சதவீதத்துக்கும் மேலாகவும், 129 குளங்களில் 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரையிலும், 226 குளங்களில் 25 முதல் 50 சதவீதம் வரையிலும் 142 குளங்களில் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் தண்ணீா் உள்ளது.

மழை காரணமாக மாவட்டத்தில் 219 வீடுகள் சேதமடைந்துள்ளன. 2 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 2 நாட்டுப்படகுகள் மற்றும் வலைகள் சேதமடைந்துள்ளன. ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் பகுதியில் சில குளங்களில் உடைப்பு ஏற்படும் நிலை இருந்தது. இருப்பினும் உடனடியாக சரிசெய்யப்பட்டது. மதுரையில் இருந்து 1000 டன் யூரியா உரம் ஓரிரு நாள்களில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிறது. மொத்தம் 1900 டன் யூரியா உரம் விரைவில் வர உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com