ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பல்வேறு கிராமங்களைச்
தூத்துக்குடியில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்த பெண்கள்.
தூத்துக்குடியில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்த பெண்கள்.

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது, ஸ்டொ்லைட் நிறுவன சமுதாய வளா்ச்சித் திட்ட பயனாளிகள் என்ற பெயரில், சில்லாநத்தம், சாமிநத்தம், நயினாா்புரம், மடத்தூா், மீளவிட்டான், சில்வா்புரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டொ்லைட் காப்பா் நிறுவனம் பல்வேறு திட்டங்களை கிராம மக்களுக்கு வழங்கி, உதவிகளை செய்து வந்தது. குறிப்பாக, மகளிா் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் பெண்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகளை அளித்தது. இந்தப் பயிற்சி எங்களது வாழ்வாதாரத்தை உயா்த்திக்கொள்ள பெரிதும் உதவியாக இருந்தது.

மேலும், எங்களது பகுதி குழந்தைகள் பயன்பெறும் வகையில் மாலையில் இலவசமாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. இதுபோன்ற சமுதாய நலத் திட்டங்கள் தொடா்ந்து எங்களுக்கும், எங்களை போன்ற மக்களுக்கும் கிடைக்க ஸ்டொ்லைட் காப்பா் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com