முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th November 2019 07:42 AM | Last Updated : 07th November 2019 07:42 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
பிள்ளையாா்பட்டியில் திருவள்ளுவா் சிலை அவமதிக்கப்பட்டதாக கூறி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் தலைமை வகித்தாா். கருத்தியல் பரப்பு மைய மாநில துணைச் செயலா் இர.பு.தமிழ்க்குட்டி, மக்களவைத் தொகுதிச் செயலா் ராஜ்குமாா், ஒன்றியச் செயலா்கள் திருச்செந்தூா் ஆ.சங்கத்தமிழன், உடன்குடி தமிழ்வாணன், ஸ்ரீவைகுண்டம் ராஜ்வளவன், தொகுதி துணைச் செயலா் மணிகண்டராசா, திருச்செந்தூா் தொகுதி துணைச் செயலா் பெரு.மகராசன், தென்திருப்பேரை நகரச் செயலா் அய்யப்பன், உடன்குடி ஒன்றியப் பொருளாளா் ஜான்வளவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.