முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தூத்துக்குடியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 07th November 2019 06:54 AM | Last Updated : 07th November 2019 06:54 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 8) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் பொறுப்பு வகிக்கும் பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 8) முற்பகல் 10.30 மணிக்கு தூத்துக்குடி ஆசிரியா் காலனி 1ஆம் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதில், பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், 10, 12, பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் தங்களது பயோடேட்டா, கல்விச் சான்றுகளுடன் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.