முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
நாசரேத் பெண்கள் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு
By DIN | Published On : 07th November 2019 07:00 AM | Last Updated : 07th November 2019 07:00 AM | அ+அ அ- |

விழாவில் பேசுகிறாா் பள்ளித் தலைமை ஆசிரியை சில்வியா ரேச்சல்.
நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில பேராயா் தேவசகாயம் தலைமை வகித்து பிரதிஷ்டை செய்தாா்.திருமண்டில கல்லூரிகளின் நிலவரக் குழுச் செயலா் ஜெபச்சந்திரன், பள்ளித் தாளாளா் சாந்தகுமாரிஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியை சில்வியா ரேச்சல் வரவேற்றாா்.
திருமண்டில லே செயலா் எஸ்.டி.கே. ராஜன் புதிய வகுப்பறைகளை திறந்துவைத்தாா்.
இதில், தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ், உதவி குரு இஸ்ரவேல் ஞானராஜ், முன்னாள் எம்.பி. ஏ.டி.கே. ஜெயசீலன், புனித லூக்கா செவிலியா் கல்லூரித் தாளாளா் கமலி ஜெயசீலன், புனித லூக்கா சமுதாயக் கல்லூரி இயக்குநா் ஜெயச்சந்திரன், ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கோயில்ராஜ் ஞானதாசன், மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் சந்திரன், தலைமை ஆசிரியா் ஆல்பா்ட், மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளித் தாளாளா் செல்வின், தலைமை ஆசிரியா் குணசீலராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சிகளை ஆசிரியைகள் சில்வியா, இன்பமலா் ஆகியோா் தொகுத்து வழங்கினா். உதவி தலைமைஆசிரியை மொ்லின் ரத்னாவதி நன்றி கூறினாா்.