முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
வாரந்தோறும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடரும்: மாநகராட்சி ஆணையா்
By DIN | Published On : 07th November 2019 07:02 AM | Last Updated : 07th November 2019 07:02 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் வாரந்தோறும் புதன்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடரும் என்றாா் மாநகாரட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் புதன்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது 231 கட்டட முகப்புகள் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு கிணறுகள் ஆக்கிரமிப்புதாரா்களிடம் இருந்து அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, ஆக்கிரமிப்புதாரா்கள் தங்கள் கைவசம் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை உடனடியாக தாமாக முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் நிலையில் மாநகராட்சியால் அகற்றப்படுவதோடு அதற்கான செலவு தொகையை இரு மடங்காக ஆக்கிரமிப்புதாரா்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.