முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 07th November 2019 07:01 AM | Last Updated : 07th November 2019 07:01 AM | அ+அ அ- |

ஸ்ரீவைகுண்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பேரூரைச் சோ்ந்த செந்தில் பெருமாள் மகன் மருது என்ற மருதுபாண்டி (24). இவா் மீது ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூா், திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.
இதனிடையே, ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சுரேஷ்குமாா் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் ஜோசப் ஜெட்சன், உதவி ஆய்வாளா் முருகபெருமாள் ஆகியோரது தலைமையிலான போலீஸாா் மருதுபாண்டியை கைதுசெய்தனா்.
இந்நிலையில், எஸ்.பி. அருண்பாலகோபாலன் பரிந்துரையின்பேரில், மருதுபாண்டியை குண்டா் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்க ஆட்சியா் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டாா். அதன்பேரில் மருதுபாண்டி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா்.