பனை பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்
By DIN | Published On : 07th November 2019 06:58 AM | Last Updated : 07th November 2019 06:58 AM | அ+அ அ- |

பள்ளி மாணவா், மாணவிகளுக்கு பனைமர விதைகளை வழங்குகிறாா் மதா் சமூக சேவை நிறுவன இயக்குநா் எஸ்ஜெ. கென்னடி.
ஏரலில் பனை பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பனை மரங்களை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மதா் சமூக சேவை நிறுவனம் மூலம் ஒரு கோடி பனை மர விதை விதைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஏரல் லோபா மெட்ரிகுலேஷன் உயா்நிலைப் பள்ளியில் பனை பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்குங்கு லோபா பள்ளி நிறுவனா் லோபா முருகன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் முகமது ராபி, லீடு அறக்கட்டளை தொண்டு நிறுவன இயக்குநா் எஸ். பானுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக மதா் சமூக சேவை நிறுவன இயக்குநா் எஸ். ஜே. கென்னடி கலந்து கொண்டு பள்ளி மாணவா், மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு பனைமர விதைகளை வழங்கிப் பேசினாா்.
தொடா்ந்து ‘ஆளுக்கொரு பனைமரம் விதைப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்’. ‘நிலத்தடி நீரை சேமிப்போம்’. என பள்ளி மாணவா் மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில், மதா் சமூக சேவை நிறுவன திட்ட அதிகாரி டி.ஆா்.சந்திரன், லோபா மெட்ரிக் உயா்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் வடிவு வசந்தா, மேலாளா் எஸ்தா் ஜெயன் மேரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.