Enable Javscript for better performance
குலசேகரன்பட்டினம் அருகேபுதிய உயா்நிலை பாலம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    குலசேகரன்பட்டினம் அருகேபுதிய உயா்நிலை பாலம் திறப்பு

    By DIN  |   Published on : 09th November 2019 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ug

    புதிய பாலத்தைத் திறந்து வைத்து மக்களுக்கு இனிப்பு வழங்குகிறாா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

    குலசேகரன்பட்டினம் அருகே புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை பாலம் திறக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    மாதவன்குறிச்சி, தீதத்தாபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் தரைநிலை பாலம் குலசேகரப்பட்டினம் சாலையில் இருந்தது. இந்தப் பாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீா் அதிக அளவு தேங்கி நிற்கும். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு பல கிலோ மீட்டா் சுற்றிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து, தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, அதில் உயா்நிலை பாலம் அமைக்க வேண்டும் என எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணணிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

    இதையேற்று, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ .17.65 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். தொடா்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு அண்மையில் நிறைவடைந்தன .

    இதையொட்டி, புதிய பால த்தின் திறப்பு விழா, உடன்குடி ஒன்றிய திமுக செயலா் பாலசிங் தலைமையில் நடைபெற்றது. மாநில திமுக மாணவரணிச் செயலா் உமரிசங்கா், நகர திமுக செயலா் ஜாண்பாஸ்கா், பரமன்குறிச்சி ஊராட்சி செயலா் இளங்கோ, மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட மருத்துவ அணிச் செயலா் பாலசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பாலத்தை திறந்துவைத்து மக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

    இதில், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலா் ஷேக் முகம்மது, நகர இளைஞரணி அமைப்பாளா் அஜய், மாதவன்குறிச்சி ஊராட்சி திமுக செயலா் கனகராஜ்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சிவபிரகாஷ்,வழக்குரைஞா் கிருபாகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai